இலங்கையில் சிறிலங்க விமானப்படை நடத்திய தாக்குதலில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்செல்வனுக்குத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?
என்று கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.