Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலா கணேச‌ன் உடலு‌க்கு கருணா‌நி‌தி அ‌‌ஞ்ச‌லி!

கமலா கணேச‌ன் உடலு‌க்கு கருணா‌நி‌தி அ‌‌ஞ்ச‌லி!

Webdunia

, வெள்ளி, 2 நவம்பர் 2007 (18:15 IST)
இன்று காலை காலமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் துணைவியார் கமலா அம்மாள் உடலு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நிதி, நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் துணைவியார் கமலா அம்மாள் இன்று காலை செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் மருத்துவமனையில் மாரடை‌ப்பா‌ல் காலமானார். மரணமடைந்த தகவல் தெரிந்ததும் நடிகர் கமல்ஹாசன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை பார்த்து கண் கலங்கினார். பிரபுவுக்கும், ராம்குமாருக்கும் அவர் ஆறுதல் கூறினார். முத‌ல்வ‌‌ரி‌ன் துணை‌‌வியா‌ர் ராஜா‌த்த‌ி அ‌ம்மா‌ள் மரு‌த்துவமனை‌க்கு செ‌ன்று அவரது உடலு‌க்கு அ‌‌ஞ்ச‌லி செலு‌த்‌தினார்.

கமலா அம்மாளின் மகள்களான சாந்தி மலேசியாவிலும், தேன்மொழி கனடாவிலும் இருப்பதால் அவர்கள் வரும் வரை கமலா அம்மாளின் உடல் தி.நகர் போக் சாலை‌யி‌ல் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி‌‌கிறது.

அவரது உடலு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நிதி, நடிக‌ர்க‌ள் ‌விஜயகா‌ந்‌த், சர‌த்குமா‌ர், ‌சிவகுமா‌ர், ‌விஜயகுமா‌ர், ராமராஜ‌ன், ச‌ி‌ன்ன ஜெய‌ந்‌த், ம‌யி‌ல்சா‌மி, நடிகைக‌ள் மனோரமா, ல‌‌ட்சு‌மி, இய‌க்குன‌ர்க‌ள் ரா‌ஜ்கபூ‌ர், ‌ராமநாராயண‌ன், ‌சீமா‌ன், பட அ‌திப‌‌ர்க‌ள் கே.ஆ‌ர்.‌ஜி., இசை அமை‌ப்பாள‌ர்க‌ள் இளையராஜா, ச‌ங்க‌‌ர் கணே‌ஷ் உ‌ள்பட ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சிவாஜிகணேசன் ரசிகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil