தமிழ்நாட்டில் இன்று ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 3 நாட்களாக மழையின் அளவு குறைந்து, ஆங்காங்கே பெய்து வருகிறது.
வங்கக்கடலில் தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும் இடையே மையம் கொண்டிருந்த குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்து பலவீனம் அடைந்துவிட்டது. நேற்று இரவு சென்னையில் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும். வட தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே பலத்த மழைபெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.