சேலம் ரெயில் கோட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
சேலம் ரெயில்வே கோட்டம் அமைய வேண்டும் என்பது தமிழக மக்களின் 60 ஆண்டு கால கனவு ஆகும். பல தடைகளை தாண்டி அந்த கனவு இன்று நனவாகி விட்டது. இதற்கான விழா சேலம் கிழக்கு ரெயில்வே காலனி மைதானத்தில் இன்று நடந்தது.
முதலமைச்சர் கருணாநிதி சேலம் புதிய ரயில்வே கோட்டத்தை திறந்து வைத்தார். மாலை 4 மணிக்கு துவங்கிய விழாவுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் கருணாநிதி புதிய கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய கோட்ட துவக்க விழாவையொட்டி சேலம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.