Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமுகை வனப்பகுதியில் புலிதோல் வைத்திருந்தவர் கைது

-எமது ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

சிறுமுகை வனப்பகுதியில் புலிதோல் வைத்திருந்தவர் கைது

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (11:49 IST)
சிறுமுகை வனப்பகுதியில் புலிதோல் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டா‌்.

webdunia photoWD
ஈரோடு வனக்கோட்டத்தை சேர்ந்த பவானிசாகர் வனத்துறை ரேஞ்சர் மோகன் மற்றும் சிறுமுகை வனசரக ரேஞ்சர் செல்வய்யா விஜயகுமார் ஆகியோருக்கு சிறுமுகை மற்றும் பவானிசாகர் வனச்சரக எல்லையில் புலித்தோல் கடத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்படி இரண்டு ரேஞ்சர்க‌ள் தலைமையிலான வனக்குழுவினர் சிறுமுகை மற்றும் பவானிசாகர் சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமுகை வனப்பகுதி குமரன்சாலை என்ற இடத்தில் வசித்து வரும் குமரன் என்பவர் புலித்தோல் ஒன்றை விற்பனைக்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது தன் மாடுகளை அழித்த புலியை விஷம் வைத்து கொன்றதாக கூறினார். இவரிடம் சுமார் 1 மீட்டர் அகலமும் 2மீட்டர் நீளம் உள்ள ஒரு புலித்தோல் கைபற்றப்பட்டது.

இவரை வனத்துறைனர் கைது செய்து சிறுமுகை வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தோலுக்குறிய புலிக்கு சுமார் 15 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil