Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவர் இனம் ஒரே இன‌ம் ஆ‌க்க தயார் : கருணாநிதி!

தேவர் இனம் ஒரே இன‌ம் ஆ‌க்க தயார் : கருணாநிதி!

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (10:24 IST)
கள்ளர், மறவர், அகம்படியர் இந்த 3 சமுதாயத்தினரும் ஒத்துக்கொண்டால் தேவர் இனம் ஒரே இனம் என்று அறிவிக்கத்தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்க‌ளி‌ன் வெ‌ண்கல‌ ‌சிலைகளை மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே நிறுவப்பட்டுள்ளன. இதனை ‌திற‌ந்து வை‌த்து முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், மருதுபாண்டியர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற ஒரு ஆதங்கம், ஒரு விருப்பம் இந்த வட்டாரத்திலே உள்ள குறிப்பிட்ட சமுதாயத்திலே உள்ள பெரியவர்களுடைய ஆசை. இவைகளையெல்லாம் படிப்படியாக எனக்கு நினைவூட்டப்பட்டு, இதற்காக தேதி பெற்று இன்றைக்கு இந்த விழா மதுரையில் சித்திரைத்திருவிழா போல இந்த சிலை திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சமுதாயத்தினரும் நாம் கொஞ்சம் வெளிப்படையாக சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். ஏதாவது ஒரு இதிலே சேருகின்ற சமுதாயம் இப்படி ஆகிவிடக் கூடாது. எல்லா சமுதாயமும் சமத்துவமாக நன்மைகளை பெற முடியுமா? என்றால், பெற முடியும் என்றால் நான் இந்த சிலை திறப்பு விழாவிலே உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், நிச்சயமாக இந்த இனத்தை ஒரே இனமாக நான் அறிவிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.

எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம் என்று கள்ளர், மறவர், அகம்படியர் இந்த மூன்று சமுதாயத்தாரும் ஒத்து கொள்வர்களேயனால், நான் மறுநாளே தேவரினம் ஒரே இனம் என்று அறிவிக்க தயாராக இருக்கிறேன் என்பதை மருதுபாண்டியர் சிலை திறப்பு விழாவிலே உங்களுக்கு உறுதிபட கூறி கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். அப்படிபட்ட எல்லோரும் ஒத்து கொள்ளக்கூடிய- நான் சொன்ன இந்த 3 சமுதாயங்களும் ஒத்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும், அப்படி உருவானால் அது எனக்கும் சுலபம் ஆணை பிறப்பிக்க, ஆணை பிறப்பிக்கப்பட்டால் இந்த சமுதாயங்களுக்கும் லாபம், பெருத்த ஆதாயம் நிச்சயமாகக் கிடைக்கும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil