Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி சிறப்பு : செ‌ன்னை‌யி‌ல் 50 இடங்களில் திருடர்க‌ள் படங்கள்!

தீபாவளி சிறப்பு : செ‌ன்னை‌யி‌ல் 50 இடங்களில் திருடர்க‌ள் படங்கள்!

Webdunia

, செவ்வாய், 30 அக்டோபர் 2007 (16:55 IST)
தீபாவ‌ளி ‌ிருட‌ர்க‌ளை எ‌ளி‌தி‌ல் அடையாள‌ம் க‌ண்டு கொ‌ள்ள செ‌ன்னை‌யி‌ல் மு‌க்‌கிய 50 இட‌‌ங்க‌ளி‌ல் ‌திருட‌ர்க‌ளி‌ன் பட‌ங்க‌ளை காவ‌ல் துறையினர் வை‌த்து‌ள்ளன‌ர்.

தீபாவளி பண்டிகையையொ‌‌ட்டி தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அ‌திக‌ரி‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளது.

துணி‌க்கடை‌‌களுக்கு வரும‌் பெ‌ண்க‌ளி‌ட‌ம் பே‌ச்சு கொடு‌ப்பது போ‌ல் நைசாக ‌திருடி ‌வி‌ட்டு செ‌ல்‌கி‌‌ன்றன‌ர். மேலே மோதுவது போ‌ல் மோ‌தி சா‌ரி எ‌ன்ற வா‌ர்‌த்தையுடன‌் செ‌ல்லு‌ம் அவ‌ர்க‌ள் ‌திடீரென மாயமா‌கி ‌விடுவா‌ர்க‌‌ள். பி‌‌ன்ன‌ர் பா‌க்‌கெ‌‌ட்டை பா‌ர்‌த்தா‌ல் பண‌ம் காணாம‌‌ல் போ‌ய்‌ இரு‌க்கு‌ம். அ‌ந்த அளவு‌க்கு ‌சாது‌ர்யமாக பண‌‌த்தை அடி‌த்து‌ச் செ‌ல்‌கிறா‌ர்க‌ள் ‌திரு‌ட‌ர்க‌ள். இவ‌ர்க‌ளி‌ன் தொ‌ந்தரவு நாளு‌க்கு நா‌ள் அ‌‌திக‌ரி‌‌த்து வ‌ண்ண‌ம் உ‌ள்ளது.

இது கு‌றி‌த்த புகா‌ர்க‌ள் ‌‌தின‌ம் ‌தின‌ம் காவ‌ல் ‌நிலைய‌‌த்து‌க்கு வ‌ந்து கொ‌ண்டே இரு‌க்‌‌கி‌ன்றன. இதை தடுக்க காவ‌ல்துறை‌யின‌ர் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மக்கள் கூ‌ட்ட‌ம் அதிகமு‌ள்ள தெருக்களிலும், துணிக் கடைகள் முன்பும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது தவிர பெண் காவல‌‌ர்க‌ள் மாறு வேட‌ங்க‌ளி‌ல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் கோபுர‌ம் அமை‌த்து ‌தீ‌விரமாக க‌ண்கா‌ணி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

இதற்கிடையே தீபாவளி திருட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பிக்பாக்கெட் திருடர்களின் படங்களை சென்னையில் முக்கிய இடங்களில் விளம்பர பலகை போல வைக்கும் புதிய ஏற்பாட்டை சென்னை காவ‌ல் செய்துள்ளது.

ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், புரசைவா‌க்க‌ம், ‌மு‌க்‌கிய இட‌‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள திரையரங்குகள் உள்பட 50 இடங்களில் திருடர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. சாலை தடுப்புச் சுவர்கள், துணிக் கடைகள் முன்பும் திருடர்களின் படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்களில் இருக்கும் திருடர்களை கூட்டங்களில் யாராவது பார்க்க நேர்ந்தால் அருகில் உள்ள காவ‌ல‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌க்கல‌ா‌ம் என்று காவ‌ல்துறை‌யின‌ர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவ‌ல்துறை‌யின‌‌ரி‌ன் இ‌ந்த நடவடி‌க்கையை பொதும‌‌க்க‌ள் வெகுவாக பாரா‌ட்டுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil