சேது சமுத்திர திட்டம் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு சென்னையில் இன்று முதல் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறது.
தமிழர்களின் 150ஆண்டு காலக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை பாஜக, அதிமுக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சேதுசமுத்திரத் திட்டப் பணியில் ஒரு பகுதிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இதை தொடர்ந்து இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க மத்திய கப்பல் அமைச்சகம் 10 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
சேதுசமுத்திரத் திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை இக்குழுவினரிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இக்குழுவினர் சென்னையில் இன்று பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிய தொடங்கியுள்ளனர்.
அடுத்த மாதம் 3ம் தேதி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இக்குழு தங்களது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும்.