Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நைஜீரியாவில் 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்!

நைஜீரியாவில் 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்!

Webdunia

, திங்கள், 29 அக்டோபர் 2007 (20:52 IST)
நைஜீரிய நாட்டில் உள்ள துறைமுகப் பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்களை அங்குள்ள தீவிரவாத இயக்கம் கடத்தியுள்ளது!

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் காமராஜ் (வயது 33), கே. மோகன்தாஸ் (37), பி. வினோத் (32), மராட்டிய மாநிலம் தானேயைச் சேர்ந்த பாண்டுரங்கன் தாரி ஆகியோர் நைஜீரியாவில் ஹார்போர்ட் துறைமுகத்தை ஒட்டிய கடற்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணற்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை அவர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாகவும், அது குறித்து அயல்நாடு வாழ் இந்தியர்கள் துறைக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உள்துறை துணை அமைச்சர் ராதிகா செல்விக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜி. பிரகாஷ் கூறியுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், முதலமைச்சர் கருணாநிதிக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.

தாங்கள் கடத்தியுள்ள நால்வரையும் விடுவிக்க 5 கோடி அமெரிக்க டாலர்களை தீவிரவாதிகள் பிணையம் கேட்டுள்ளதாக கடத்தப்பட்ட அஜித் காமராஜின் சகோதரர் சுதர்சனம் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil