Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலூ‌‌ரி‌ல் 35 ஆ‌யிர‌ம் ஹெ‌க்டே‌ர் ப‌யி‌ர்க‌ள் மூ‌ழ்‌‌கியது!

கடலூ‌‌ரி‌ல் 35 ஆ‌யிர‌ம் ஹெ‌க்டே‌ர் ப‌யி‌ர்க‌ள் மூ‌ழ்‌‌கியது!

Webdunia

, திங்கள், 29 அக்டோபர் 2007 (13:15 IST)
கனமழையால் கடலூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெல், நிலக்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 3 ஆயிரம் ‌‌வீடுக‌ளி‌ல் மழைநீர் புகுந்து‌ள்ளதா‌ல் பொதுமக்கள் பா‌தி‌ப்படை‌ந்து‌ள்ளன‌ர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கொட்டிய கன மழையால் கடலூர் மாவட்டம் கடு‌‌மையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலம் தாலுகாவில் உள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வாகன போக்குவரத்து அடியோடு கை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நேற்று 2வது நாளாக வெள்ளச்சேதப் பகுதிகளை பார்வையிட்டார். முதல் நாளான நேற்று முன்தினம் சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டங்களையும், நேற்று நெய்வேலி, விருத்தாச்சலம் பகுதிகளையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை அமைச்சரிடம் விவசாயிகள் சோகத்துடன் எடுத்துக் காட்டினார்கள். உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ‌விவசா‌யிக‌ள் கேட்டுக் கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "கெடிலம், பெண்ணையாறு, வெள்ளாறு, பரவனாறு, கொள்ளிடம், பழைய கொள்ளிடம், மணிமுத்தாறு ஆகிய 7 ஆறுகள் கூடுகின்ற இடமாக கடலூர் விளங்குவதால் இங்கு அடிக்கடி வெள்ள‌ப் பாதிப்பு ஏற்படு‌கிறது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ம‌க்களு‌க்கு உடனடியாக ‌நிவாரண‌ம் வழ‌ங்கு‌ம்படி அ‌திகா‌ரிகளு‌க்கு உ‌த்தர‌வி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று கூறினார்.

கனமழையால் கடலூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெல், நிலக்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. சுமார் 3 ஆயிரம் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விட்டதால் பொதுமக்கள் மிகுந்த ‌சிரம‌த்‌தி‌ற்கு ஆளாகியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil