Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசு‌ம்பொ‌ன் மு‌த்துராம‌லி‌ங்க‌த்தேவர் நினைவிடத்தில் நாளை கருணா‌நி‌தி அஞ்சலி!

பசு‌ம்பொ‌ன் மு‌த்துராம‌லி‌ங்க‌த்தேவர் நினைவிடத்தில் நாளை கருணா‌நி‌தி அஞ்சலி!

Webdunia

, திங்கள், 29 அக்டோபர் 2007 (12:53 IST)
சுத‌ந்‌திர போரா‌ட்ட ‌வீ‌ர‌ர் பசு‌ம்பொ‌ன் மு‌த்துராம‌லி‌‌ங்க‌த் தே‌வ‌ர் ‌நினை‌விட‌த்த‌ி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நாளை மல‌ர் வளைய‌ம் வை‌‌‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌கிறா‌ர்.

சுத‌ந்‌திர போரா‌ட்ட ‌வீர‌ர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நூற்றாண்டு விழாவும், 45-வது குரு பூஜையும் அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை நடக்கிறது. விழாவில் முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

விழாவில் பங்கேற்க முதலமைச்சர் கருணாநிதி நாளை காலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மதுரை வருகிறார். ரெயில் நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் கருணாநிதி அழகர்கோவில் சாலை‌யி‌ல் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்பு காலை 8.30 மணிக்கு காரில் பசும்பொன் செல்லு‌ம் அவ‌ர் 10 மணிக்கு பசும்பொன்னில் உள்ள மு‌த்துராம‌லி‌ங்க‌த்தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் அங்குள்ள மைதானத்தில் தமிழக அரசு சார்பில் நடக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி தலைமை தாங்குகிறார். அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலை வகிக்கிறார்.

விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள கடடடங்களை திறந்து வை‌த்து நூ‌ற்றா‌ண்டு மலரை வெளியிடுகிறார். அதோடு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கு‌கிறா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil