Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பா‌தி‌ப்பு

-எமது ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பா‌தி‌ப்பு

Webdunia

, சனி, 27 அக்டோபர் 2007 (11:55 IST)
திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து அதிகபாரம் ஏற்றிவந்து பழுதான லாரியால் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 15 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. இது தேசிய நெடுஞ்சாலை 209 ஆகும். பண்ணாரியில் இருந்து திம்பம் வரை மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஆறு, எட்டு, மற்றும் இருபது ஆகிய மூன்று கொண்டை ஊசி வளைவுகளும் மிகவும் குறுகியவையாகும். இதில் சாதாரண வாக‌ன‌ங்க‌ள் திரும்புவதற்கே சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து நாள்தோறும் மரம் மற்றும் பாராங்கல் ஏற்றிவரம் டாரஸ் லாரிகள் அதிகபாரம் ஏற்றிவந்து குறுகிய வளைவில் திரும்பமுடியாமல் நிற்பதால் இந்த பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையினர் இந்த சாலையில் அதிகபட்சமாக லாரியுடன் சேர்ந்து மொத்தம் 16.20 டன் பாரம் மட்டுமே ஏற்றிவரவேண்டும்.
அதேபோல் 3.80 மீட்டர் உயரம் மட்டுமே இருக்கவேண்டும் இந்த கொண்டை ஊசி வளைவில் இருபது கி.மீ., வேகத்தில் மட்டுமே வரவேண்டும் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

ஆனால் இந்த அறிவிப்பு பலகையை எந்த லாரியும் கடைபிடிப்பதில்லை. அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடு‌க்க‌ப்படுவதில்லை.

சாதாரணமாக டாரஸ் லாரி மட்டும் சுமார் 7 டன் எடை கொண்டதாகும். இந்த லாரியில் முப்பது டன் முதல் ஐம்பது டன் எடைவரை பாராங்கல் ஏற்றி வருகின்றனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையினர் அறிவித்துள்ள பாரத்தைவிட சுமார் 40 டன்வரை அதிகபாரம் ஏற்றிவருகின்றனர். வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவில் திரும்பமுடியாத காரணத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் அதிகபாரம் ஏற்றிவந்த டாரஸ் லாரி எட்டாவது கொண்டைஊசி வளைவில் பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின் லாரியை பழுதுநீக்கி லாரியை நகர்த்தியபோது ஏழாவது கொண்டைஊசி வளைவில் திரும்பும்போது திரும்பமுடியாமல் லாரி நின்றுவிட்டது. இதன் காரணமாக நேற்று காலை பத்து மணிவரை போக்குவரத்து முற்றிலும் தடையானது.

இதனால் தாளவாடி மற்றும் கர்நாடகா மாநிலம் செல்லும் அனைத்து லாரி மற்றும் பேரு‌ந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இரவில் கடும்மழை பெய்ததால் பேரு‌ந்து பயணிகள் சாப்பாடு மற்றும் தண்ணீரும் கிடைக்காமல் குளிரில் பெரும் அவதிபட்டனர்.

இதன்காரணமாக பண்ணாரியில் இருந்து வரிசையாக லாரிகள் மற்றும் பேரு‌ந்துகள் நிறுத்தப்பட்டது. அதேபோல் ஆசனூ‌ர்வரை வாகனங்கள் வரிசையாக நின்றது. இருபக்கமும் சுமார் பத்து கி.மீ. ூரம் லாரிகள் இருபக்கமும் வரிசையாக காத்திருந்தது.

ஆசனூ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் சோதனைசாவடியில் அதிகபாரம் ஏற்றிவரும் லாரிகளை தடுத்து நிறுத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிறன்றர் இந்த வழியாக செல்லும் பேரு‌ந்து ஓ‌ட்டுந‌ர்க‌ள்

Share this Story:

Follow Webdunia tamil