Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரசவத்‌தி‌ல் தாய், குழந்தை இறந்தால் செவிலியர் மீது நடவடிக்கை : அமைச்சர் எ‌ச்ச‌‌ரி‌க்கை! ‌‌

பிரசவத்‌தி‌ல் தாய், குழந்தை இறந்தால் செவிலியர் மீது நடவடிக்கை : அமைச்சர் எ‌ச்ச‌‌ரி‌க்கை!
‌‌

Webdunia

, சனி, 27 அக்டோபர் 2007 (11:34 IST)
கிராம‌ங்க‌ளி‌ல் பிரசவ‌த்‌தி‌ன் போது தா‌ய், குழ‌ந்தை இ‌ற‌ந்தா‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட செ‌வி‌லிய‌ர் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ம்.ஆ‌‌ர்.கே.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் எ‌ச்ச‌ரி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ள‌ா‌‌ர்.

பிரசவத்திற்கு அரசு மரு‌த்துவமனை‌க்குதா‌ன் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வளர்ந்துள்ளது. 29 மாவட்டங்களில் உள்ள 270 அரசு மரு‌த்துவமனைக‌ளி‌‌ல் உள்கட்டமைப்பு மேன்மைப் படுத்தப்படுகிறது எ‌ன்று சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ம்.ஆ‌ர்.கே.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் கூ‌றினா‌ர்.

முதல் கட்டமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள 35 அரசு மருத்துவமனைகளில் இப்பணிக்கு 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 2-வது கட்டமாக மீதியுள்ள 232 மருத்துவமனைகளுக்கு 200 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்க உள்ளது எ‌ன அமை‌ச்ச‌ர் மேலு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பிரசவ காலங்களில் தாய் - சேய் இறப்பு இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. கிராமங்களில் பிரசவத்தின் போது தாய், குழந்தை இறந்தால் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று அமை‌ச்‌ச‌ர் எ‌ம்.ஆ‌‌ர்.கே.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் கூ‌றினா‌ர்.

மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மரு‌த்துவமனைகளில் இலவசமாக தொடர்பு கொள்ள 1056 என்ற எண்ணுள்ள தொலைபேசி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நேரங்களில் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உதவி செய்ய ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இதற்கு கட்டணமாக கி.ீ.க்கு ரூ.5 ஒரு வழிக்கு மட்டும் வசூலிக்கப்படும். இந்த டெலிபோனை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil