ஊட்டியில் ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். 2 சிறுவர், சிறுமிகள் படுகாயம் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பேய்மழை பெய்யத் தொடங்கியது.
தொடர் மழை காரணமாக ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-மஞ்சூர் சாலைகளில் 20 இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து சாலை இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
ஊட்டி நொண்டிமேடு அருகே உள்ள ராம்தாஸ்நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பத்மநாபன் என்பவருடைய வீடு முழுவதும் மண்ணுக்குள் புதைந்தது. தகவல் அறிந்ததும் ஊட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் கமலா (35) என்ற பெண் பரிதாபமாக இந்தார். மண்ணில் புதைந்து உயிருக்கு போராடிய கமலாவின் மகன் சபரீஷ் (8), மகள் சாந்தாமணி (14) ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் ரெயில் நிலையம் அருகே கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் புதுப்புது அருவிகள் உருவாகி யுள்ளன. எங்கு பார்த்தாலும் அருவிகளாய் காட்சி அளிக்கின்றன.