Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டோ டிரைவர்கள் 29‌ல் வேலை நிறுத்தம்!

Advertiesment
ஆட்டோ டிரைவர்கள் 29‌ல் வேலை நிறுத்தம்!

Webdunia

, வெள்ளி, 26 அக்டோபர் 2007 (10:46 IST)
சிறைபிடித்த ஆட்டோக்களை விடுவிக்கவும், பெர்மிட் ரத்து நடவடிக்கையை வாபஸ் வாங்கக் கோரியும் வரு‌ம் 29-ஆ‌ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ஆட்டோ ஓட்டுனர்கள் தவறு செய்கிறார்கள் என்று நூற்றுக்கணக்கான ஆட்டோவை போக்குவரத்து துறையினர் சிறைபிடித்து மாத கணக்கில் விடுவிக்காமல் உள்ளனர். ஆட்டோ டிரைவர்களின் வாழ்வுரிமையை பறிப்பது ஜனநாயக விரோதமான அரசின் நடவடிக்கையை கண்டிக்கின்றோம் எ‌ன்று ஆ‌ட்டோ தொ‌ழிலாள‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் எ‌ஸ்.த‌ங்க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சிறைபிடித்த ஆட்டோக்களை விடுவிக்கவும், பெர்மிட் ரத்து நடவடிக்கையை வாபஸ் வாங்கக் கோரியும், மீட்டர் கட்டண விஷயத்தில் போக்குவரத்து துறை, காவல்துறையின் அராஜக நடவடிக்கையை கண்டித்தும் வரு‌ம் 29-ஆ‌ம் தேதி ஒரு நாள் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்வதென்று அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என ச‌ங்க‌த் தலைவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

எனவே அன்று ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் முன்பு நடைபெறும். தொழிற் சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரிடம் ஆட்டோ ஓட்டுனர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி மனு கொடுக்கப்படும் எ‌ன்று‌ம் ச‌ங்க‌த் தலைவ‌ர் த‌ங்க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ள‌ா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil