இ-பே இந்தியாவின் பண்டிகைக்கால சிறப்புக் கூப்பன்கள்
பரிசு மழையில் நனையுங்கள்... சிறந்த பொருட்களைப் பெறுங்கள்.
மும்பை, அக்.24, 2007: ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான இ-பே இந்தியா, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் இந்த பண்டிகைக்காலத்தின் ஈடு இணையற்ற பரிசுகளை வெல்ல அழைக்கிறது. இ-பே இந்தியாவில் அதிர்ஷ்டத்தை பெறுங்கள்!
நீங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் 50 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும் இ-பே பரிசுக் கூப்பன்களை வெல்லுங்கள். “இ-பே அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள் ” என்ற இந்த சிறப்பு விழாக்கால பரிசுத் திட்டம் அக்டோபர் 23-ஆம் தேதி துவங்கி தீபாவளி பண்டிகைக் காலம் முழுதும் கடந்து நவம்பர் 22, 2007 வரை நீடிக்கிறது.
அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம் இருக்கிறாள்... அதிர்ஷ்டம் உங்களுக்கே... www.ebay.in/getlucky என்ற முகவரியில் லாக் ஆன் செய்து உங்கள் இ-பே பயனாளர் அடையாளத்தை சமர்ப்பிக்கவும். பல வகையான பொருட்களுக்கான 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் இ-பே பரிசுக் கூப்பன்களை பெறுங்கள். இந்த பரிச்க் கூப்பன்களுடன் இலவசமாக 5 மிடாஷி டிவிடி ப்ளேயர்கள், 3 நோக்கியா மொபைல்கள், ஒரு சகாரா லேப்டாப், 2 ஐ.எஃப்.பி மைக்ரோ ஓவன்கள், சஞ்சீனி வைர மோதிரங்கள் 3, வில்ஸ் லைஃப் ஸ்டைல் டி ஷர்ட்கள் 10 ஆகியவற்றையும் வெல்லுங்கள்.
இந்த விழாக்கால பரிசுத் திட்டத்தை அறிவித்துப் பேசிய இ-பே இந்தியா நிறுவன உயரதிகாரி ராதின் லாஹிரி, "நீங்கள் உங்களுக்கு பிரியமானவர்களுக்காக பரிசுப் பொருட்களை வாங்கினாலும், அல்லது உங்கள் உபயோகத்திற்கு ஒரு புதிய மின்னணு சாதனத்தை வாங்கிக் கொண்டாலும், ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு இ-பே ஈடு இணையற்ற ஒரு தள்ளுபடி விலையில் பல்வேறு வகையான பொருட்களை வழங்குவதில் பெருமை கொள்கிறது" என்றார்.
இ-பே இந்தியாவின் பரிசு மழையில் நனைந்து பல்வேறு பொருட்களை அள்ளுங்கள். அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள் திட்டத்தில் வைர நகைகள் துவங்கி மோதிரங்கள், பிரேஸ்லெட்கள், நெக்லஸ் செட்கள், உயர்தர ஜவுளிகள், வீட்டு உபயோக மற்றும் சொந்த உபயோக சாதனங்கள் ஆகியவற்றை அதிர்ஷ்டசாலிகளுக்கு திறந்து வைத்துள்ளது.
ஈடு இணையற்ற அதிரடி தள்ளுபடி மற்றும் உங்கள் பண்டிகையை வண்ணமயாக்க www.ebay.in/getlucky -ல் லாக் ஆன் செய்யவும்.
அதிர்ஷ்ட தேவதையிடன் ஆசியைப் பெறுங்கள்!