Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 கிலோ அரிசியை பல தவணைகளில் வாங்கலாம்: அமைச்சர் வேலு தகவ‌ல்!

20 கிலோ அரிசியை பல தவணைகளில் வாங்கலாம்: அமைச்சர் வேலு தகவ‌ல்!

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (11:54 IST)
''ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 20 அரிசியை ஒரே தவணையாகவோ அல்லது தேவைக்கு ஏற்ப எத்தனை தவணைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்'' என்று உணவுதுறை அமைச்சர் எ.வ.வேலு கூ‌றினா‌ர்.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒரே தவணையாகவோ அல்லது தேவைக்கேற்ப எத்தனை தவணைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் அ‌றி‌வி‌த்தா‌ர்.

நியாய விலை கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பொருட்களை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து உடனுக்குடன் எடுத்து நியாய விலை கடைகளுக்கு விநியோகம் செய்வதை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உறுதி செய்து கொள்ள வேண்டும் எ‌ன அமை‌ச்ச‌ர் வேலு கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

கூட்டுறவுத்துறை, வழங்கல் துறை அதிகாரிகள் பொருட்களின் தரத்தினை உறுதி செய்த விவரம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் பொது விநியோக திட்ட ஆய்வு கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil