காவலர்கள் பேச்சைக் குறைத்து செயலிலா அக்கறை காட்ட வேண்டும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையை அடுத்த மாதவரத்தில் புதிய காவல் நிலையத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகையில், காவல்துறையினர் பேச்சைக் குறைத்து செயலிலே அக்கறை காட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
புதிய காவல் நிலையத்தை திறந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த வருகைப்பதிவேட்டில் குறிப்பு எழுத சொன்னார்கள். ஒரே வரியில் நான் எழுதினேன். சட்டம், ஒழுங்கை பாதுகாத்து சிறப்பாக, செவ்வனே செயல்பட காவல் நிலையம் பயன்பட வேண்டும் என்று எழுதினேன் என்றார்.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சிக்கு ஆதரவு தருவது போல, சட்டம்- ஒழுங்கை காப்பாற்றி அதிகாரிகள், காவலர்கள் மக்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.