Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரில் குதித்து தாய், மகள் தற்கொலை

-எமது ஈரோடு செ‌‌ய்‌தியாள‌‌ர்

தண்ணீரில் குதித்து தாய், மகள் தற்கொலை

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (09:14 IST)
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தண்ணீரில் குதித்து தாய் மற்றும் மகள் தற்கொலை செய்தனர். ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கர்ப்பிணி பெண்ணும் அவறது உறவு பையனும் இறந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ளது தொட்டம்பாளையம். இங்கு வசிப்பவர் வெள்ளிங்கிரி. இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி (27) இவர்களுக்கு பூவிதா (7) என்ற மகள் உள்ளார். பூவிதா பவானிசாகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

வெள்ளிங்கிரிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரேவதி தன் மகள் பூவிதாவுடன் அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் அருகே சென்று தன் மகளை தண்ணீரில் வீசி தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இதேபோல் ஈரோடு அருகே உள்ள அம்மாபேட்டை சக்திநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவடைய மனைவி சித்ரா (20) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு மாதங்கள் மட்டும் ஆகிறது. சித்ரா அருகே செல்லும் காவிரி ஆற்றில் குளிக்க தன்னுடைய உறவு பையன் நாகராஜ் (8) இவருடன் சென்றுள்ளார்.

காவிரி ஆற்றில் குளிக்கும்போது எதிர்பாரத விதமாக நாகராஜை தண்ணீர் இழுத்து சென்றது. கா‌ப்பாற்ற சென்ற சித்ராவும் தண்ணீரில் மூழ்கினார். சித்ரா தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil