மின்சார உற்பத்தில் தனியார் ஈடுபட உதவும், 'மெர்ச்சன்ட் பவர் புராஜக்ட்' திட்டத்தில் 4 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் முழுமையாகச் செயல்படவில்லை. காற்று வீசாததால் மின் ஒற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கு வங்காளத்திடம் இருந்து மின்சாரம் வாங்குகிறோம்.
வடகிழக்கு பருவக்காற்று தொடங்கினால் காற்றாலைகள் இயங்கத் தெடங்கிவிடும். பிறகு மேற்கு வங்காளத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தி விடுவோம்.
மின்சார உற்பத்தில் தனியார் ஈடுபட உதவும், 'மெர்ச்சன்ட் பவர் புராஜக்ட்' திட்டத்தில் 4 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தனியார் நிறுவனங்கள், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மணப்பாடு ஆகிய இடங்களில் காற்றாலைகளை அமைக்கும். அவற்றின் மூலம் மொத்தம் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இது தவிர 7,000 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் வகையில் 4 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
'மெர்ச்சன்ட் பவர் புராஜக்ட்' திட்டத்தில் மின் உற்பத்தி செய்ய உள்நாடு, அயல்நாடுகளைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.