Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3.53 லட்சம் இளைஞர்களுக்கு 26ஆ‌ம் தே‌தி உதவி தொகை: கருணாநிதி அறிவிப்பு!

3.53 லட்சம் இளைஞர்களுக்கு 26ஆ‌ம் தே‌தி உதவி தொகை: கருணாநிதி அறிவிப்பு!

Webdunia

, திங்கள், 22 அக்டோபர் 2007 (16:46 IST)
படி‌த்தமுடி‌த்தவேலவா‌ய்‌ப்பஅலுவலக‌த்த‌ி‌லப‌திவசெ‌ய்தவேலை‌க்காகா‌த்‌திரு‌க்கு‌ம் 3.53 ல‌ட்ச‌மஇளைஞ‌ர்களு‌க்கநா‌ன்கா‌மக‌ட்டமாவரு‌ம் 26ஆ‌மதே‌தி அரசஉத‌வி‌ததொகவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றமுத‌லமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்ததமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : படிப்பு முடிந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் எவ்வித வேலைவாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களின் துயரத்தை துடைத்திடும் வகையில் அவர்களில் 10ஆ‌மவகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200, இளங்கலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300 வீதம் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் முதற்கட்டமாக 11.11.2006 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 24.2.2007 அன்று கோவையிலும், மூன்றாம் கட்டமாக 29.7.2007 அன்று சென்னையிலும் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நான்காம் கட்டமாக 3 லட்சத்து 53 ஆயிரம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் பணிகள் 26.10.2007 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளன.

அன்றைய தினம் தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் விழாக்களில் அமைச்சர் கலந்து கொண்டு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குவார்கள் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி அமைச்சர்கள் பங்கேற்கும் மாவட்டங்கள் விவரம் :

செங்கம் (சு.வாளவெட்டி)- ஆற்காடு வீராசாமி, தண்டாராம்பட்டு எ.வ.வேலு, நாமக்கல்-மு.க.ஸ்டாலின், திருவையாறு- கோ.சி.மணி, ஆத்தூர்-வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு- துரைமுருகன், திருகோவிலூர்- க.பொன்முடி, முசிறி- கே.என்.நேரு, திட்டக்குடி-எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேட்டுப்பாளையம் - பொங்கலூர் பழனிச்சாமி.

வத்தலக்குண்டு- பெரியசாமி, கல்குளம் (கன்னியாகுமரி மாவட்டம்) -சுரேஷ்ராஜன், பெரம்பூர்-பரிதி இளம் வழுதி, ராமேஸ்வரம்- சுப.தங்கவேலன், ஸ்ரீவில்லிபுத்தூர்- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருத்தணி-தா.மோ.அன்பரசன், காரைக்குடி-கே.ஆர். பெரிய கருப்பன், பவானிசாகர்- என்.கே.கே.பி.ராஜா, திருமயம்- தங்கம் தென்னரசு.

கிருஷ்ணராயபுரம் -உபதுல்லா, ஊத்தங்கரை- மைதீன் கான், பாப்பிரெட்டிபட்டி - என்.செல்வராஜ், உத்தம பாளையம்- வெள்ளக் கோவில் சாமிநாதன், அம்பாசமுத்திரம்- பூங்கோதை, ஸ்ரீவைகுண்டம்- கீதா ஜீவன், வாடிப்பட்டி-தமிழரசி, தரங்கம்பாடி- கே.பி.பி.சாமி, நன்னிலம்-மதிவாணன், கோத்தகிரி-ராமச்சந்திரன், குன்னம்-துரைசாமி.

Share this Story:

Follow Webdunia tamil