காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீ ஜெயேந்திரர், ஸ்ரீ விஜயேந்திரர் உட்பட பலர் இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை புதுச்சேரியில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஸ்ரீ ஜெயேந்திரர், ஸ்ரீ விஜயேந்திரர் உட்பட 16 பேர் ஆஜராகவில்லை. இதற்கான மனுக்களை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.