பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் கல்வியை பள்ளிகளில் அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து மக்கள் கருத்தறிய வெங்கையா நாயுடு தலைமையிலான குழு நாளை சென்னை வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் கல்வியை சொல்லிக் கொடுப்பதால் மட்டுமே பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாது. பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாடுகளில் இது பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என தமிழசை செளந்திரராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.
செல்பேசி, இன்டர்நெட் போன்ற ஊடகங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது போல் பாலியல் கல்வியும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தயங்காமல் தங்கள் கருத்துக்களை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.