வாடிக்கையாளர்களை கவர பி.எஸ்.என்.எல். நிறுவனம் வரும் 1ஆம் தேதி முதல் 50 ரூபாய் மதிப்பில் புதிய ரிசார்ஜ் கூப்பனை அறிமுகம் செய்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது ரூ.200, ரூ.300, ரூ.500, ரூ.1000, ரூ.2000, ரூ.3000 மதிப்புள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் கூப்பன்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் மற்ற தனியார் செல்பேசி நிறுவனங்களோ குறைந்த விலையில் ரீசார்ஜ் கூப்பன்களை விற்பனை செய்கிறது.
பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டு சந்தாரர்கள் தொடர்ந்து பேச வேண்டும் என்றால் மாதா மாதம் ரூ.200 ரீசார்ஜ் கூப்பன் வாங்க வேண்டும். ரூ.200 கார்டு வரியுடன் சேர்த்து ரூ.225க்கு விற்கப்படுகிறது.
தற்போது பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகைகளை அறிவிக்க உள்ளது. ரூ.50, ரூ.100, ரூ.150 ஆகிய 3 குறைந்த விலைகளில் ரீசார்ஜ் கூப்பனை வரும் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்கிறது.
அதன்படி ரூ.50 விலை ரீசார்ஜ் கூப்பனில் 10 நாட்கள் பேசலாம். ரூ.100 மதிப்புடைய கார்டில் 15 நாட்கள் பேசலாம். அதேபோல் ரூ.150 மதிப்புள்ள கார்டில் ஒரு மாதம் பேசவும் வசதி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் பி.எஸ்.என்.எல். ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் இனி குறைந்த விலையிலான ரீசார்ஜ் கார்டை பயன்படுத்த முடியும்.