Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுக்கட்சி துவக்கினார் முத்துலட்சுமி

Advertiesment
புதுக்கட்சி துவக்கினார் முத்துலட்சுமி

Webdunia

, ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (15:08 IST)
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, மலைவாழ் மக்கள் இயக்கம் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார்.

தனது கணவரான வீரப்பனை தேடும் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினரால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்காக நான் போராடி வருகிறேன். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை சுற்றி வாழும் மலை வாழ் மக்களின் நலனுக்காக நான் போராட வேண்டும் என்று மூழு வீச்சில் இறங்கிவிட்டேன்.

அவர்களுக்காக மலைவாழ் மக்கள் இயக்கம் என்பதை நான் துவக்கியுள்ளேன் என்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முத்துலட்சுமி கூறினார்.

வீரப்பனுடன் காட்டில் 3 ஆண்டுகள் இருந்ததன் மூலம், காட்டில் வாழும் மக்கள் எத்தனை துயரத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் பெற்ற அனுபவங்களும் புதிய கட்சி ஒன்றை துவக்கும் அளவிற்கு வழிகாட்டியுள்ளதாக அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil