தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு செல்பேசிகள் கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில கல்வித் துறை அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்பேசி கொண்டு வரவும், அங்கு அவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.