Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமராஜர் ஆட்சி அமைப்பதே லட்சியம்

-ஈரோடு செய்தியாளர்

காமராஜர் ஆட்சி அமைப்பதே லட்சியம்

Webdunia

, புதன், 17 அக்டோபர் 2007 (16:55 IST)
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே காங்கிரஸ் கட்சியினரின் லட்சியம் என்று இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.

மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவராக டாக்டர் சுரேஷை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் நியமித்தார்.

சுரேஷ் அளித்த பேட்டியில், நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. நீர் மட்டுமின்றி நிலக்கரி, காற்றாலை, சூரியஒளி போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் அபரிமிதமான மின்சார தேவைக்கு அணு சக்தி அவசியம்.

"21ம் ூற்றாண்டை விஞ்ஞான யுகத்துக்கு இட்டு செல்வேன்' என்று மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பிரகடனம் செய்தார். இந்த வகையில் மின்சார உற்பத்திக்கு அமெக்காவுடனான அணுதி ஒப்பந்தம் அடித்தளமாக அமையும். அணுதி ஒப்பந்தம் எந்த வகையிலும் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்காத வகையில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதைபுரிந்து கொள்ளாத பாரதிய ஜனதா உள்ளிட்ட சில எதிர்க்கட்சியினர் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக இத்திட்டத்தை எதிர்த்து கூக்குரல் எழுப்புவதில் எவ்வித நியாயமும் இல்லை.

தமிழகத்தின் நீண்ட நாளைய மக்கள் கனவுத் திட்டமாக சேது கால்வாய் திட்டம் உள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசு தீவிரமாக உள்ளன. முன்பு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டிய பாரதிய ஜனதாவும், அ.தி.மு.க.வும் சேர்ந்து கொண்டு இத்திட்டத்தை வர விடாமல் எப்படியும் முடக்க வேண்டும் என்று மக்களை திசை திருப்பி வருகின்றனர்.

சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் போது ூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி பெறும். இக்கால்வாய் அமைப்பதன் மூலம் பயண ூரம் குறைந்து கப்பலின் எரிபொருள் பெருமளவில் மிச்சப்படும்.

ூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி பெற்று தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் இக்கால்வாய் மூலம் பெருகும். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், இத்திட்டம் நிறைவேறுவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் உள்ளன.

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதே கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்து. இளைஞர்களுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தர வலியுறுத்தப்படும். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில், மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸை மேலும் வலுப்படுத்த உறுப்பினர்கள் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்படும்.

மத்திய அமைச்சர் வாசன் தலைமையில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைவதே இளைஞர் காங்கிரஸின் சபதம் என்று மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil