தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு தி.மு.க உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்று அ.தி.முக. உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
அவர்களை அமைதிகாக்குமாறு அவைத்தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதைச் செவிமடுக்காத அ.தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதாகத் தெரிகிறது.
எனவே அவர்களைக் கூண்டோடு வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.