1,000 பொறியாளர் விரைவில் நியமனம்
-எமது திருச்சி செய்தியாளர்
போக்குவரத்து துறையில் 1000 பொறியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
திருச்சி கல்லக்குடியில் புதிய வழித்தட பேருந்துகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது,
தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 18,700 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தை நவீனப்படுத்துவதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 6000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. 12,000 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில் 1000 பொறியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
நமது அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று நேரு தெரிவித்தார்.