கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் கைது
-எமது திருச்சி செய்தியாளர்
தஞ்சை அருகே உள்ள உஞ்சிய விடுதி கிராமத்தில் வசித்து வரும் ரீனா என்கிற தஸ்லிம் மரியம் தட்கல் முறையில் கடவுச்சீட்டு கேட்டு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இவர் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் சரியாக இல்லாமலும், முறைகேடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இதனையடுத்து ரீனாவை போலிசார் விசாரித்ததில் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் துரைராஜ், விஜய நிர்மலா ஆகியோர் இதற்கு துணை போனதும கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது.