ஆர்.எஸ்.எஸ்க்கு சமூகமே முக்கியம்-மோகன் பகவத்
-எமது திருச்சி செய்தியாளர்
ஆர்.எஸ்.எஸ். இயக்க திருச்சி கிளை சார்பில் நாட்டை வலுப்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். பார்வை என்ற தலைப்பில் அகில இந்திய செயலர் மோகன் பகவத் பேசியதாவது, நாட்டில் சமூக பலத்தை அதிகப்படுத்த வேண்டும்.
தேச பக்தியை உணர்த்த வேண்டும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வித பலம் மறைந்துள்ளது. இதில் நல்ல திறமையை வெளிக்கொண்டு வந்து நாட்டின் கட்டுமானத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் சமூகமே முக்கியமானதாக கருதுகிறது. சமூகம் மீசூத கவனம் செலுத்தி வருகிறது. அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவது நோக்கமல்ல கிராமப் புறங்களில் இந்த இயக்கம் வீடு, வீடாக பிரசாரம் செய்து வருகிறது என்று கூறினார்.