காவலரிடம் பணம், வாகனம் கொள்ளை
-எமது திருச்சி செய்தியாளர்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றுபவர் கந்தசாமி. வயது 21.
இவர் மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடியி்ல் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத சிலர் அவரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.
அவரிடம் இருந்து 1,200 ரூபாய் பணம், செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மயக்கமான நிலையில் கிடந்த கந்தசாமியை சிலர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.