திருச்சியில் அடிக்கடி மின் தடை
-எமது திருச்சி செய்தியாளர்
திருச்சியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருச்சியில் திடீர் திடீரென மின் தடை ஏற்படுவதால் தொழிலகங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மின் உற்பத்தி 1750 மெகாவாட் திடீரென குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் மீண்டும் மின் உற்பத்தி பழைய நிலையை அடைந்ததும், சீரான நிலை ஏற்படும் என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.