சூப்பர் பாஸ்ட் ரெயில்களின் வேகம் குறைக்க கோரிக்கை
-எமது திருச்சி செய்தியாளர்
தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு சார்பில் அதன் செயலர் பேராசிரியர் டாக்டர் எஸ். புஷ்பவனம் மத்திய அமைச்சர் ஆர். வேலுவிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அதில், இன்றைக்கு அதிவேக ரெயில்களின் வேகம் ஒப்புக் கொள்ளக் கூடிய அளவில் இல்லை 1978ம் ஆண்டில் இயக்கப்படட் 2 விரைவு ரயிக்லளின் வேகம் சராசரியாக மணிக்கு 66 கி.மீ. வேகமுடையதாக இருந்தது.
1992ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு பின் அதிவேக ரெயில்களை சராசரியாக மணிக்கு 53 கி.மீ. வேகத்தில்தான் இயக்க யேவண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
அனால் தற்போது மறைமுக வருவாயை பெருக்க மணிக்கு 52 மற்றும் 51 கி.மீ. வேக ரயில்களை 53 கி.மீ. வேக ரயில்களாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக உபரி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.
அதிவேக ரயில்கள் சராசரியாக மணிக்கு 70 கி.மீ. என வேகத்தை நிர்ணயித்து அதன்படி மறுபடியும் ரயில்களை வகைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.