தமிழக சட்டசபையின் மழைகால கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இதில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட 5 சட்டமுன்வரைவுகள் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு, சென்னையில் குப்பைகளை அகற்றாமல் இருந்தது, சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ராமரை பற்றி முதலமைச்சர் கருணாநிதி பேசியது ஆகியன இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டப் பின் அவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்படும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சட்ட சபையை நடத்துவது என்பது பற்றி முடிவெடுக்கும்.
இந்த கூட்டத் தொடரில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்த விதிமுறை உள்ளிட்ட 5 சட்ட முன்வரைவுகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.