Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ்!

த‌மிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ்!

Webdunia

, செவ்வாய், 16 அக்டோபர் 2007 (09:43 IST)
த‌‌மிழக அரசு போ‌‌க்குவர‌‌த்து கழக ஊ‌ழிய‌ர்களு‌க்கு 20 ‌விழு‌‌க்காடு போன‌ஸ் வழ‌ங்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று போ‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே.நேரு கூ‌றினா‌ர்.

இந்த ஆண்டு, போனஸ் சட்ட விதிமுறைகள் மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் (போனஸ் கணக்கீட்டிற்கான உயர்ந்தபட்ச மாத ஊதியம் ரூ.2500-லிருந்து ரூ.3500 என்றும், போனஸ் பெற தகுதியான ஊதியவரம்பு ரூ.3500-லிருந்து ரூ.10 ஆயிரம் எனவும் திருத்தி அமைக்கப்பட உள்ளது எ‌ன போ‌க்குவர‌‌த்து‌த்துறை அமை‌ச்‌ச‌ர் நேரு கூ‌றினா‌ர்.

சென்ற ஆண்டு வழங்கப்பட்ட 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 ‌விழு‌க்காடு கருணைத் தொகை, ஆக மொத்தம் 20 வ‌ிழு‌க்காடு என்ற அளவிலேயே உச்சவரம்பை கணக்கில் கொள்ளாமல் வழங்கப்பட்டால், ஒரு நபருக்கு உயர்ந்தபட்ச போனஸ் தொகையாக ரூ.8,400 வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பணியாளர்களுக்கு மொத்தம் சுமார் ரூ.86 கோடி செலவு ஏற்படும். அதாவது சராசரியாக ஒரு நபருக்கு ரூ.7,791 கிடைக்கும். மத்திய அரசின் போனஸ் உச்சவரம்பு சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த போனஸ் தொகை வழங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 1998ஆ‌ம் ஆண்டு செப்டம்பர் 1ஆ‌ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தமும் அவ்வாறே 3 ஆண்டுகளுக்கு என ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 1.9.2001 முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறின்றி கடந்த 31.8.2005-ல், 1.9.2003 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது ஊதிய ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளுக்கொரு முறை என்று இருந்ததை, 5 ஆண்டு காலத்துக்கு என நீட்டிக்கப்பட்டது. அதன்படி அடுத்த ஊதிய ஒப்பந்தம் 1.9.2008 முதல் ஏற்படுத்தப்பட வேண்டும் எ‌ன அமை‌ச்ச‌ர் நேரு கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil