திருச்சியில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது
-எமது திருச்சி செய்தியாளர்
கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மாநகராட்சி ஆணையர் பால்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சர் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஏற்படள்ள பாதிப்பால் ஒரு சில பகுதிகளில் இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
4 கோட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை நீர் வடிகால், கழிவு நீர் வடிகால்கள் தூர்வாரி தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து பின்னர் குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.