ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுமோ காரில் ஏர்வாடிக்கு வந்த கேளராவை சேர்ந்த 5 வாலிபர்கள் பேருந்து மோதி பலியானார்கள்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், காக்க நாடா அருகில் உள்ள சித்தேத்துக் கரா பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 8 பேர் நேற்று இரவு அங்கிருந்து ஏர்வாடி செல்வற்காக ஒரு டாடா சுமோ காரில் புறப்பட்டனர். இரவு 9 மணிக்கு பொள்ளாச்சி அருகே வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்துவிட்டு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை பழனியை அடுத்த சின்னகலையம்புத்தூர் அருகே சுமோ வந்தபோது எதிரே பழனியில் இருந்து உடுமலைப்பேட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், சுமோ அப்பளம் போல் நொறுங்கியது. சுமோவில் இருந்த ஜாகீர் (27), ஷாஜகான் (25), அபுபக்கர் (22), அனீஷ் (24), சாதிக் (25), ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள்.
காயமடைந்த லேபான், சனூப், சித்திக் ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பேருந்தில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பழனி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுமோவில் வந்தவர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏர்வாடிக்கு சென்றுள்ளனர். அனைவரும் கேரளாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று தெரியவந்தது.