இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பெருவிழா கொண்டாடப்பட்டது.
சென்னை தீவுத் திடலில் தென்னிந்திய இஷா- அத்துல் இஸ்லாம் சபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மவுலானா முப்தி முகம்மது உசேன் காசிம் ஹஜ்ரத் தொழுகையை நடத்தினார்.
இதில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் சேக் தாவூத், பொருளாளர் சையத் ஜமாலுதீன், காங்கிரஸ் நிர்வாகிகள் துல்கருணை, இம்ரான் சாகிப் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிஜாமுதீன் அ.தி.மு.க. சிறு பான்மை பிரிவு துணை தலைவர் மரைக்காயர், காயிதே மில்லத் பேரவை தலைவர் இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எழும்பூர் இம்பீரியல் வளாகத்தில் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கில் பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி தனி இடங்களில் தொழுகை நடந்தது.
தவ்ஹீத் ஜாமாத் தலைவர் ஜெய்னூல் ஆப்தீன் சிறப்புரை ஆற்றினார். தென்சென்னை மாவட்ட தலைவர் இதாயத் துல்லா உள்பட பலர் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் பெண்களும், குழந்தைகளும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்து பரிமாறி கொண்டனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகளை கொண்டாடினர்.