Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதாரண தொலைபே‌சி‌க்கு‌ `ப்ரீபெய்டு' கார்டு : பி.எஸ்.என்.எல். அறிமுகம்!

சாதாரண தொலைபே‌சி‌க்கு‌ `ப்ரீபெய்டு' கார்டு : பி.எஸ்.என்.எல். அறிமுகம்!

Webdunia

, ஞாயிறு, 14 அக்டோபர் 2007 (14:00 IST)
சாதாரண தொலைபே‌சி‌க்கு‌ம் '‌ப்‌‌ரீ பெ‌ய்டு' க‌ா‌ர்டுகளை ‌பி.எ‌ஸ்.‌எ‌ன்.எ‌ல். அ‌றிமுக‌ப்படு‌த்‌தியு‌ள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ப‌ல்வேறு சலுகைகளை வழங்கி சந்தாதாரர்களை தக்க வைத்து கொள்ள பி.எஸ்.என்.எல். டெலிபோன் நிறுவனம் பல்வேறு யுக்திகளை ப‌ய‌ன்படு‌த்‌தி வருகிறது.

செல்பே‌சிகளின் வளர்ச்சியா‌ல் சாதாரண தொலைபே‌சிகளுக்கு மவுசு குறைந்து வருகிறது. அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில்தான் சாதாரண தொலைபே‌சி பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்துவோர் பெரும்பாலானோர் செல்பேச‌ிக்கு மாறிவிட்டனர்.

செல்பேச‌ிக்கு 'ப்ரீ பெய்டு' கார்டு திட்டம் இருப்பது போன்று தொலைபே‌சிகளுக்கும் `ப்ரீ பெய்டு' திட்டத்தை பி.எஸ்.என்.எல். புதிதாக அறி முகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக பொது தொலைபேசி (பி.சி.ஓ.)களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1000,ரூ.2000, ரூ.5000 வகைகளில் கார்டுகள் வழங்கப்படுகிறது. 38 ‌விழு‌க்காடு முதல் 42 ‌விழு‌க்காடு வரை கமிஷன் கிடைக்கிறது. விரைவில் சாதாரண தொலைபேச‌ி வைத்திருப்பவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடு‌த்த‌ப்படு‌கிறது.

'ப்ரீ பெய்டு' கார்டுகளை வாங்கி அய‌ல்மாநிலங்கள் மட்டுமின்றி அய‌ல்நாடுகளுக்கும் பேசலாம். தொலைபே‌சி வைத்திருப்பவர்களுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை ‌பி‌ல் வரும். அதை கட்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஆனால் த‌ற்போது அ‌றிமு‌க‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள 'ப்ரீ பெய்டு' கார்டுகளை பயன்படுத்தினால் பில் தொகை கட்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இதற்கான ஸ்டாட்டர் பேக்கேஜ் விலை ரூ.300 ஆகும்.

அவரவர் வச‌தி‌‌க்கு ஏ‌ற்ப ப்ரீபெய்டு கார்டுகளை பயன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த கார்டுகளை பயன்படுத்தினால் மாத வாடகை கிடையாது.

Share this Story:

Follow Webdunia tamil