ஹஜ் பயணம் செய்ய இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு புத்தறிவுப் பயிற்சி முகாம் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகிறது.
ஹஜ் 2007-க்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு பல்வேறு மையங்களில் புத்தறிவுப் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சியின் போது சவூதி அரேபியாவிலுள்ள விதிமுறைகள் மற்றும் இதர நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழிமுறைகள், இந்திய ஹஜ் குழு மற்றும் ஜித்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தில் செய்துள்ள இதர ஏற்பாடுகள், மற்றும் இதர தகவல்கள் பற்றி விரிவாக விளக்கிக் கூறப்படும். இப்பயிற்சி முகாம்கள் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும்.
ஹஜ்ஜை முறையாக நிறைவேற்ற இப்பயிற்சி முகாம்களில், பெண் புனிதப் பயணிகள் உட்பட ஹஜ் பயணிகள் அனைவரும் அதாவது தேர்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறும், அதன்மூலம் ஹஜ் பயணத்திற்கான விதிமுறைகள், வழிவகைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாகத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பன்னாட்டு பாஸ்போர்ட்டில் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக சிறப்பு பயிற்சியாளர்களை மாநில ஹஜ் குழு அனுப்பி வைக்க உள்ளது. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஆலிம்கள் ஹஜ் நிறைவேற்றுவதற்கான சடங்குகள் மற்றும் நடைமுறைகள் குறித்து உரையாற்றுவார்கள். இதுகுறித்து ஏதேனும் தகவல் ஹஜ் பயணிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவை தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி எண்கள்: 044-28252519 மற்றும் 044-28227617)
பயிற்சி முகாம்கள் நடைபெறும் இடங்கள் தேதி விவரம் வருமாறு: 16ஆம் தேதி (தமிழ்), 17ஆம் தேதி (உருது) தமிழ்நாடு பைத்துல் ஹஜ் ஹவுஸ், டிமெல்லோஸ் ரோடு, சூளை, சென்னை. சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள்.