''ஷவ்வால் மாதப்பிறை நேற்று தென்படவில்லை. இதனால் ரம்ஜான் பண்டிகை நாளை (ஞாயிறு) கொண்டாடப்படும்'' என்று தமிழக அரசின் தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.
இதேபோல டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பிறை காணப்படவில்லை. இதனால் அங்கும் ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.