சிறப்பாக செயல்பட்ட 22 பஞ்சாயத்து தலைவர்களுக்கு உத்தமர் காந்தி ஊராட்சி விருதை முதலமைச்சர் கருணாநிதி வழங்கி பாராட்டினார்.
மாநில அளவிலான விருது 2001-2006-ஆம் ஆண்டு வரையிலான கிராம ஊராட்சிகளின் சிறப்பான செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்று அரசு ஆணையிட்டது. முதலமைச்சர் கருணாநிதி, கிராம சுயாட்சியை வலியுறுத்திய காந்தியடிகள் பெயரினை நினைவூட்டும் வகையில் இந்த விருதிற்கு "உத்தமர் காந்தி ஊராட்சி விருது'' என்று பெயர் சூட்டியுள்ளார்.
மாநில அளவில் சிறப்பான முறையில், புதுமையான திட்டங்களை முன்மாதிரியாக கொள்ளத்தக்க வகையில், செயல்படுத்தி சாதனை நிகழ்த்தியுள்ள 124 கிராம ஊராட்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிந்துரைகள் பெறப்பட்டன. இவற்றிலிருந்து 46 கிராம ஊராட்சிகளை இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை தலைமையில் அமைக்கப்பட்ட குழு தேர்வு செய்தது.
இந்த 46 கிராம ஊராட்சிகளிலும், இயக்குநர், ஊரக வளர்ச்சி (பயிற்சி) தலைமையிலான குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து 2006-2007 ஆண்டிற்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருது பெறுவதற்கு தகுதியுடைய 15 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்தனர்.
விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 கிராம ஊராட்சிகளில், 8 ஊராட்சிகளில் கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்களே தற்போதும் தலைவராக உள்ளனர், இவர்களுக்கும் இதர 7 கிராம ஊராட்சிகளின் முன்னாள் மற்றும் தற்போதைய தலை வர்கள் 14 பேர் ஆக, மொத்தம் 22 தலைவர்கள் இன்று முதலமைச்சர் கருணாநிதியால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்கள் விவரம் பின் வருமாறு:-
ராமநாதபுரம், மைக்கேல்பட்டிணம் ஊராட்சி, சே.சேசுமேரி
சேலம் சின்னனூர் ஊராட்சி, ஏ.சேகர்
திருவாரூர், கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி, மதிவாணன்
கன்னியாகுமரி, திக்கணங்கோடு ஊராட்சி, எஸ்.அருளானந்தஜார்ஜ்
திருச்சி, வாளாடி ஊராட்சி, செ.ஜெயச்சந்திரன்
நாமக்கல், காடாச்சநல்லூர் ஊராட்சி,கே.எம்.முனியப்பன்
காஞ்சிபுரம், பாப்பநல்லூர் ஊராட்சி, ப.கற்பகம்
திண்டுக்கல், கொ.கீரனூர் ஊராட்சி, ஆ.மு.நாட்டுதுரை
கோயம்புத்தூர், ஓடந்துரை ஊராட்சி, எஸ்.லிங்கம்மாள்
ஈரோடு, திண்டல் ஊராட்சி, கு.மணிமேகலை
சிவகங்கை, நாலுகோட்டை ஊராட்சி, சு.ப.ராஜேஸ்வரி
வேலூர், காட்டுப்புதூர் ஊராட்சி, க.விஸ்வநாதன்
தேனி, லெட்சுமிபுரம் ஊராட்சி, வீ.ல.கி.ஜெய பாலன்
கடலூர், எம்.கொளக்குடி ஊராட்சி, கே.பாபுராஜன்
விழுப்புரம், ஜக்கம்பேட்டை ஊராட்சி, கே.கம்சலா
கோயம்புத்தூர், ஓடந்துரை ஊராட்சி, ர.சண்முகம்
ஈரோடு, திண்டல் ஊராட்சி, தி.செ.குமாரசாமி
சிவகங்கை, நாலுகோட்டை ஊராட்சி, என்.ஓ.வி.எஸ்.ராமநாதன்
வேலூர், காட்டுப்புதூர் ஊராட்சி, அ.சந்திரிகா
தேனி, லெட்சுமிபுரம் ஊராட்சி, பி.ஞான மணி
கடலூர், எம்.கொளக்குடி ஊராட்சி, பா.கலையரசி
விழுப்புரம், ஜக்கம்பேட்டை ஊராட்சி, கே.பிரேம்குமார்
உத்தமர் காந்தி ஊராட்சி விருது பெற்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட இந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் 22 பேருக்கும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். விருது பெற்ற கிராம ஊராட்சித்தலைவர்களுக்கு அமைச்சர் தேநீர் விருந்து அளித்தார்.