Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபையில் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: ச‌ட்டபேரவை‌ தலை‌வ‌ர்!

Advertiesment
சட்டசபையில் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: ச‌ட்டபேரவை‌ தலை‌வ‌ர்!

Webdunia

, புதன், 10 அக்டோபர் 2007 (16:53 IST)
ச‌ட்டசபை‌யி‌‌ல் மு‌ஸ்‌லி‌ம்க‌ள் ம‌ற்று‌ம் ‌கி‌றி‌ஸ்‌தவ‌ர்களு‌க்கான இட ஒது‌க்‌கீடு ‌திரு‌த்த மசோதா உ‌ள்பட 5 மசோதா‌க்க‌ள் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌கிறது எ‌ன்று ச‌ட்ட‌ பேரவை‌த் தலை‌‌வ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.

ச‌ட்டபேரைவ‌த் தலை‌வ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழக 13-வது சட்டமன்றத்தின் 6-வது கூட்டத் தொடர் வரு‌ம் 17‌ஆ‌ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி (பூங்காநகர்), சதாசிவம் (அரவாக்குறிச்சி), முத்துசாமி (சங்கராபுரம்), சிவராமன் (திருப்பத்தூர்), நல்லசாமி (பவானி), ராம ஜெயம் (மயிலாப்பூர்) ஆ‌கியோ‌ரி‌ன் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் எ‌ன்றா‌ர்.

இதையடுத்து தமிழ்நாடு சட்டங்கள் சிறப்பு விதிமுறை திருத்த மசோதா, கூட்டுறவு சங்க அலுவலர் நியமன திருத்த மசோதா, தமிழ்நாடு மற்றும் குடிநீர் வடிகால் வாரிய திருத்த மசோதா, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான வேலை கல்வி இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தமிழ்நாடு நகராட்சி சட்ட திருத்த மசோதா ஆகிய 5 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதை தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும் எ‌ன்று ஆவுடை‌ப்ப‌‌ன் கூ‌றினா‌ர்.

இதில் சட்டமன்ற நிகழ்ச்சிகள் மற்றும் எத்தனை நாள் சட்டசபையை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குளிர்கால கூட்டத் தொடர். எனவே குறைந்த நாட்கள்தான் நடைபெறும் என ச‌‌ட்டபேரவ‌ை‌த் தலை‌‌வ‌ர் ஆவுடை‌ய‌ப்ப‌ன் தெ‌ரி‌‌‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil