Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத‌வி ஆசை ‌கிடையாது: நடிகர் கார்த்திக்!

Advertiesment
பத‌வி ஆசை ‌கிடையாது: நடிகர் கார்த்திக்!

Webdunia

, புதன், 10 அக்டோபர் 2007 (09:43 IST)
''என‌க்கு பத‌வி ஆசை ‌கிடையாது'' என்று நடிக‌ர் கார்த்திக் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

கடந்த 7ஆ‌ம் தேதி ராஜபாளையத்தில் நடந்த இளைஞர் அணி ஊர்வலத்தில் நான் கலந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என் அரசியல் வாழ்க்கையே அங்குதானே தோன்றியது. அதை நான் மறுபடியும் பிறந்த ஊராக கருதுகிறேன். அங்கே தற்போது சர்ச்சையில் இருக்கும் சேதுசமுத்திர திட்டத்தை பற்றியும், அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றியும் என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் எ‌ன்று பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் நடிகர் கார்த்திக் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையாலும், முக்கியமானதொரு அரசியல் காரணமாகவும், சிலபேரின் தன்னிச்சையான செயல்களாலும் என்னால் வர இயலாமல் போனது. இனி எந்த ஒரு பொதுக்கூட்டத்தையும், நான் என்னுடைய அறிக்கையில் உறுதிபடுத்தினால் மட்டுமே நம் மக்கள் வந்தால் போதும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கா‌ர்‌த்‌தி‌க் கூ‌றியு‌ள்ளா‌ர்.

என்னை தலைவர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்கள் என்று தெரியவந்தவுடன் மிகுந்த மனவேதனை அடைந்தேன். எனக்கு பதவி ஆசை கிடையாது. கட்சிக்குள் இருந்து எதிராக செயல்படுவோருக்கு நான் ஒன்றே ஒன்று கூறிக் கொள்கிறேன். இந்த பதவிக்கு என்னை விட பொருத்தமானவர் இருந்தால் நீங்கள் நேரிடையாகவே என்னிடம் கேட்கலாம். சிறிதும் தயக்கம் இல்லாமல் நானே விலகி கொள்வேன் என பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் நடிகர் கார்த்திக் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil