Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌க‌ள்க‌ள் படி‌க்கு‌ம் ப‌ள்‌ளி‌யி‌ல் எ‌ன்னை அனும‌தி‌ப்ப‌தி‌ல்லை : ‌‌‌வீர‌ப்ப‌ன் மனை‌வி!

ம‌க‌ள்க‌ள் படி‌க்கு‌ம் ப‌ள்‌ளி‌யி‌ல் எ‌ன்னை அனும‌தி‌ப்ப‌தி‌ல்லை : ‌‌‌வீர‌ப்ப‌ன் மனை‌வி!

Webdunia

, செவ்வாய், 9 அக்டோபர் 2007 (18:12 IST)
''எனது ம‌க‌ள்க‌ள் படிக்கும் பள்ளியில் நடக்கும் விழாக்களில் கூட என்னை அனுமதிப்பதில்லை. இதனால் என் பிள்ளைகளுக்கு எல்லோரையும் போல் நம் அம்மாவையும் பார்க்க முடியவில்லைலே என்ற ஏக்கம் இருக்கிறது'' எ‌ன்றமுத்துலட்சுமி கண்‌ணீ‌ர் கூ‌றினா‌ர்.

‌‌வீர‌ப்ப‌ன் மனை‌வி மு‌த்துல‌ட்சு‌மி செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கவுதமன் என்னை சந்தித்தார். அவருடன் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் மகன் தமிழ்குமரனும் வந்திருந்தார். அப்போது என்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் பல்வேறு தனிப்பட்ட விஷயங்கள் பற்றி அக்கறையுடன் கேட்டார். நான் அவரை நம்பி பல விஷயங்களை சொன்னேன். அவற்றை அவர் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த நவீன மைக் மூலம் பதிவு செய்து சென்றுள்ளார். அதையே தொடராக தயாரித்து சந்தனக்காடு என்ற பெயரில் மக்கள் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் தொடராக ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்துள்ளனர் எ‌ன்றா‌ர்.

இதை ஒளிபரப்பக் கூடாது என்று சென்னை சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் அந்த வழக்கில் மக்கள் தொலை‌க்கா‌ட்‌சி‌க்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதை எதிர்த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அப்பீல் செய்ய இருக்கிறேன். இந்த தொடர் வெளியானால் எனது மகள்கள் மனநிலை பாதிக்கும், அவர்களின் எதிர் காலம் பாழாகி விடும் எ‌ன்று மு‌த்துல‌ட்சு‌மி கூ‌றினா‌ர்.

எனது கணவர் 30 ஆண்டுகள் காட்டிலேயே வனவாசமாக இருந்தார். அவரை போலீசார் கொன்ற பிறகும் என்னை நிம்மதியாக இருக்க விட வில்லை. எனது மகள்கள் இருவரும் சென்னையில் தங்கி படிக்கிறார்கள். அவர்கள் படிக்கும் பள்ளியில் நடக்கும் விழாக்களில் கூட என்னை அனுமதிப்பதில்லை. இதனால் என் பிள்ளைகளுக்கு எல்லோரையும் போல் நம் அம்மாவையும் பார்க்க முடியவில்லைலே என்ற ஏக்கம் இருக்கிறது எ‌ன்று முத்துலட்சுமி கண்‌ணீ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வீரப்பனை பற்றி 654 பக்கங்கள் கொண்ட "மாவீரன் சந்தக்காடு வீரப்பன்'' என்ற பெயரில் சுயசரிதைப் புத்தகம் எழுதியுள்ளேன். அதில் அவரது இளமை வாழ்க்கை, எங்களது திருமண வாழ்க்கை, அவரது கடைசி காலம் உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இப்போது அதை வெளியிட்டால் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் உ‌ள்ள வழக்குகள் பாதிக்கும். வீரப்பன் கதையை தொடராக வெளியிட பலர் என்னை அணு கினார்கள். என் மகள்கள் கல்லூரி அளவுக்கு உயர்ந்த பிறகு எங்கள் ஒப்புதலுடன் வெளியிடுங்கள் என்று தான் கூறி இருக்கிறேன் எ‌ன்று ‌வீர‌ப்ப‌ன் மனைவ‌ி மு‌த்துல‌ட்சு‌மி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil