''திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன்'' என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
ராமர் பற்றி முதலமைச்சர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். முழு அடைப்பு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வால் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும், நீதிபதியின் மதிப்பைக் குறைக்கும் வகையிலும் கி.வீரமணி பேசியுள்ளார் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
ராமர் பாலம் தொடர்பான வழக்கை நீதிபதி அகர்வால் விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதனால், உச்ச நீதிமன்றத்தில் வீரமணி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன் என ஜனதா கட்சித் தலைவர் கூறினார்.