வரும் 2026ஆம் ஆண்டுகளில் சென்னையில் பெரும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் உள்ள 5 மில்லியன் வீடுகளுக்கு சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தினமும் 570 மில்லியன் லிட்டர் அளவிற்கு குடிநீரை வழங்கி வருகிறது. இதில் தொழிற்சாலைகளுக்கு 35 மில்லியன் லிட்டர் நீர் தினமும் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் 2026ஆம் ஆண்டில் சென்னைக்கு 2,250 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் தேவைப்படும். ஆனால் நமக்குள்ள தண்ணீர் வரத்தோ 1,950 மில்லியன் லிட்டராக மட்டுமே இருக்கும். இதனால் சுமார் 300 மில்லியன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் தலைவர் ஷிவ் தாஸ் மீதா கூறினார்.
எனவே எதிர்கால குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு தற்போதே பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும். நகரமயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு, விவசாயத்தில் புதிய கொள்கைகள் மற்றும் நீர் வீணாகுதல் போன்றவற்றால் தண்ணீர்ன் தேவை அதிகரித்துக் கொண்டுள்ளது.
தற்போது சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. ஆனால் இதே நிலையில் சென்று கொண்டிருந்தால் எதிர்காலத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று ஷிவ் தாஸ் கூறினார்.
எனவே, தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றாமல் நீரை சுத்திகரிப்பும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.