Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவாகரத்து வழ‌க்கை தள்ளுபடி செ‌ய்ய வே‌ண்டு‌ம்: கிரகலட்சுமி மனு!

விவாகரத்து வழ‌க்கை தள்ளுபடி செ‌ய்ய வே‌ண்டு‌ம்: கிரகலட்சுமி மனு!

Webdunia

, வெள்ளி, 5 அக்டோபர் 2007 (16:26 IST)
விவாகர‌த்து கோ‌ரி நடிகர் ‌பிரசா‌ந்‌த் தாக்கல் செய்த மனுவைத் த‌ள்ளுபடி செ‌ய்ய வே‌ண்டு‌ம் ‌கிரகல‌ட்சு‌‌மி குடு‌ம்ப நல‌‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

நடிகர் பிரசாந்துக்கும், கிரக லட்சுமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கோரி குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பிரசாந்த் மனு தா‌க்க‌ல் செய்தார். மேலு‌ம் மனைவி கிரகலட்சுமி வேணுபிரசாத் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாகவும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களின் மீதான விசாரணை இன்று நீதிபதி தேவதாஸ் முன்பு நடை பெற்றது. அ‌ப்போது நடிகர் பிரசாந்த் தனது வக்கீல் ஆனந்துடன் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜரானா‌ர். ‌கிரகலட்சுமியும் ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌ல் ஆஜரானார்.

அப்போது ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கிரகலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ''பிரசாந்தும், வேணு பிரசாத்தும் சேர்ந்து எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். வேணுபிரசாத்துடன் என‌க்கு திருமணம் நடக்கவில்லை. எனவே பிரசாந்த் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூ‌றி‌யிரு‌ந்தார்.

இதற்கு பிரசாந்த் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தா‌ர். வழக்கு விசாரணையை சீக்கிரம் தொடங்குங்கள், வழக்கை இழுத்தடிக்கவே ‌கிரகல‌ட்சு‌மி பதில் மனு தாக்கல் செய்கிறார்கள் எ‌ன்று வாதாடினா‌ர்.

இரு தரப்பு வாத‌த்தை கே‌ட்ட ‌நீ‌திப‌தி வழ‌க்கு ‌விசாரணையை அடுத்த மாதம் 6ஆ‌ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

பின்னர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இருந்து வெளியே வந்த பிரசாந்த் கூறுகை‌யி‌ல், ''நான் தொடர்ந்த வழக்கிற்கு கிரகலட்சுமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி உள்ளார். அதுபற்றி நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைப்போம்'' என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil