Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓ‌மியோப‌தி, ‌சி‌த்தாவு‌க்கு 9ஆ‌ம் தேதி கவுன்சிலிங்!

ஓ‌மியோப‌தி, ‌சி‌த்தாவு‌க்கு 9ஆ‌ம் தேதி கவுன்சிலிங்!

Webdunia

, வெள்ளி, 5 அக்டோபர் 2007 (10:56 IST)
ஓ‌மியோப‌தி, யுனா‌னி, ‌சி‌த்தா போ‌ன்ற இந்திய மருத்துவ பட்டப்படிப்பில் சேர 9ஆ‌ம் தே‌தி கவு‌ன்‌சி‌லி‌ங் நடைபெறு‌கிறது எ‌ன்று தமிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்‌பி‌ல் கூ‌றிய‌ிரு‌ப்பதாவது: தமிழக அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.‌யூ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ். (இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கு 2007-2008-ம் ஆண்டுக்கான `வாக்-இன்-கவுன்சிலிங்' (மதிப்பெண் மற்றும் இன சுழற்சி முறையில்) நடக்க உள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய பாடங்களில் முதல் கட்டத்திலேயே தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த கவுன்சிலிங்-ல் பங்கேற்க முடியும்.

இந்த படிப்புகளில் சேர்வதற்கு குறைந்தபட்ச கூட்டு தகுதி மதிப்பெண், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ர், பழ‌ங்கு‌டி‌யின‌ர் 35 ‌விழு‌க்காடு‌ம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40 ‌விழு‌க்காடும், பிற்படுத்தப்பட்டவர்கள் 45 ‌விழு‌க்காடு‌ம், மற்ற வகுப்பினர் (ஓ.சி.) 50 ‌விழு‌க்காடு‌ம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 31.12.2007-க்குள் 17 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

இந்த தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்களுக்கு 9ஆ‌ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகத்தில் `வாக்-இன்-கவுன்சிலிங்' நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள் (ஒரிஜினல்), பாஸ்போர்ட்டு அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து, ரூ.500-க்கான 2 வரைவுக் காசோலை (டி.டி.) (விண்ணப்பம் மற்றும் கவுன்சிலிங் கட்டணம்) கொடுத்து, விண்ணப்பிக்க வேண்டும். இயக்குனரகத்தில் 9ஆ‌ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் பயிற்சி கட்டணமாக ரூ.5 ஆயிரத்துக்கான வரைவு‌ காசோலையையும் கொண்டு வர வேண்டும். இந்த வரைவு காசோலை 5ஆ‌ம் தேதி அன்றோ அல்லது அந்தத் தேதிக்கு பின்னர் பெறப்பட்டதாகவோ இருக்க வேண்டும். சென்னையில் மாற்றக் கூடியதாகவும் `செயலாளர், தேர்வுக் குழு. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, சென்னை-106' என்ற என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். தேர்வுக் குழு அலுவலகத்தில் காலை 9 மணியில் இருந்து 3 மணிக்குள் இதை செலுத்தி விட வேண்டும். தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌ வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அரசுக் கல்லூரிகளில் சித்தா படிப்பில் 2 இடங்களும் (ஒரு தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் இடம், மற்றொன்று பழ‌ங்குடி‌யினருக்கானது), யுனாயி கல்வியில் 7 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (நேச்சுரோபதி) படிப்பில் ‌மிகவு‌ம் ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ரு‌க்கு (எம்.பி.சி.) ஒரு இடமும் காலியாக உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சுமார் 450 காலி இடங்கள் உள்ளன. மேல் விவரங்களுக்கு 044-26190246 என்ற போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், http/www.tn.health.org என்ற இணைய தளத்திலும் பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil